பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ராணி மங்கம்மாள்

மூழ்கியது. மனிதர்கள் துயர வெள்ளத்தில் மூழ்கினார்கள். உணர்வுகளில் குருதி கசிந்தது.

மகனின் மரணம் என்ற ஒரு பேரதிர்ச்சியில் வீழ்ந்து விட்ட ராணி மங்கம்மாளின் கண்முன் எதிர்காலம், எதிர்கால அரசியல் பொறுப்புகள் என்ற வேறு இரண்டு பெரிய அதிர்ச்சிகளும் மிக அருகில் தெரிந்தன.

"ரங்கா எனக்கு ஏன் இத்தனை பெரிய சோதனை?" என்று மகன் சரணமடைந்து அர்ப்பணமாகிவிட்ட அதே உலகளந்த பொன்னடிகளைக் கண்கலங்கிப்போய் அப்போது உள்ளம் உருகித் தியானித்தாள் அவள்.


12. பேரன் பிறந்தான்

பேரிடி போன்ற இந்தச் செய்தியை அறிந்ததும் கர்ப்பிணியாக இருந்த சின்ன முத்தம்மாள் நிலை குலைந்து போனாள். வளைகாப்பணிந்த சமயத்தில் தன்னிடம் 'உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக் கொள்வேன்' என்று உறுதி கூறியிருந்த ஆருயிர்க் கணவன் இன்று எல்லாக் கஷ்டங்களையுமே தன் தலையில் சுமத்தி இப்படி அமங்கலியாகவும், அநாதையாகவும் அழவைத்து விட்டுப் போனதை எண்ணி மனம் நைந்து வருந்தினாள். அவளது மங்கலக் கழுத்து மூளிக் கழுத்தாகிப் பொலிவிழந்தது.

"நான் இனிமேல் உயிர் வாழ்வதற்கே ஆசைப்படவில்லை! என்னைக் கணவனோடு வைத்து எரித்துவிடுங்கள். எனக்கு இந்த உலகமும் வேண்டாம். வாழ்க்கையும் வேண்டாம்" என்று ராணி மங்கம்மாளிடம் கதறினாள் அவள். வயிறும் பிள்ளையுமாக இருந்த அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவது யாராலும் முடியாததாயிருந்தது. துயரங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், வேதனை