பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

123

டில்லி பாதுஷாவை விட்டே அவன் உதவியால் தஞ்சை மன்னனிடமிருந்து மதுரைப் பெருநாட்டுக்குரிய தனக்குச் சொந்தமான ஊர்களை மீட்டாள் ராணி மங்கம்மாள். அவளுக்கு இந்த ஊர்களின் ஆட்சியுரிமையைத் திருப்பித் தராவிட்டால் டில்லி பாதுஷாவின் விரோதம் ஏற்படும் என்று பயந்து தானே வலிந்து ராணி மங்கம்மாளிடம் கத்தியின்றி இரத்தமின்றிப் போரின்றி போர்க் களமின்றி இப்படி ஒரு ராஜதந்திர வெற்றி இதனால் அவளுக்குக் கிடைத்தது. டில்லி பாதுஷாவுக்கு அடங்கிய பெரும்படைத் தலைவனான கல்பீர்கான் தென் திசைக்குப் படைகளோடு வந்தபோது சமயோசிதமான முறையில் அவனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்து விலை மதிப்பற்ற பல பரிசுகளை வழங்கச் செய்தாள் ராணி மங்கம்மாள். அதைப் பெற்ற பின் அந்தப் படைத் தலைவன் ராணி மங்கம்மாளுக்குப் பெரிதும் உதவி செய்யக் கூடியவனாக மாறினான்.

தஞ்சை மன்னன் போன்ற அக்கம் பக்கத்து அரசர்கள் எல்லாரிடமும், "ராணி மங்கம்மாளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரு கடுகளவு ஆக்கிரமிக்க முற்பட்டாலும் டில்லிப் பேரரசுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும்" என்று அந்தப் படைத் தலைவன் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றான்.

போருக்குத் தலைமை ஏற்றுப் படையெடுத்துச் சென்று எதிர்க்கவும் எதிர்த்து வந்தவர்களைத் தாக்கவும் முடியாத பெண்ணாக இருந்ததனால் ராஜதந்திர முறைகளிலேயே தன் எதிரிகளைச் சமாளித்து வந்தாள் அவள்.

"ராணி மங்கம்மாளை விரோதித்துக் கொள்வது டில்லி பாதுஷாவுக்குக் கோபமுண்டாக்கும் காரியம்" என்று தென்னாட்டுச் சிற்றரசர்கள் பேரரசர்கள் எல்லாரும் தயங்கும்படி நம்பகமான பிரமை ஒன்றை வெகு விரைவில் அவளால் உருவாக்கிவிட முடிந்தது. திரிசிரபுரத்தில் எந்தப் பாதுஷாவின் பிரதிநிதியோடு தன் மகன் தன்மானப் போரைக் கிளப்பிக் குமுறி எழுந்தானோ அந்தப் பாதுஷாவின் பிரதிநிதிகள், படைத் தலைவர்கள் அனைவரும் டில்லிக்குத் திரும்பிப்போய் "தெற்கே நமக்குத் திறை செலுத்தும் அரசுகளில் ராணி மங்கம்மாளின் அரசைப் போல் நல்ல அரசு எதுவுமே இல்லை. பாதுஷாவையும் பாதுஷாவின் பிரதிநிதி