பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ராணி மங்கம்மாள்

அவர்கள் கூறிய விளக்கங்களும் விவரங்களும், பலன்களும் அவளை மேலும் குழப்பத்தில்தான் ஆழ்த்தின. பயமும், நிம்மதியின்மையும், கவலையும்தான் அதிகரித்தன.

தொடர்ந்து சில நாட்கள் எவ்வளவோ முயன்றும் அவள் யாரிடமும் கலகலப்பாகப் பேசமுடியவில்லை. சுபாவமாக இருக்க முடியவில்லை. மனத்தில் எதை எதை எல்லாம் தவிர்க்க முயன்றாளே அவையே மீண்டும் மீண்டும்தலை தூக்கின. நினைக்க வேண்டாம்-நினைக்கக் கூடாது என்று ஒதுக்க முயன்றவை அனைத்தும் நினைவில் வந்தன. நினைக்க வேண்டும், நினைக்கக் கூடும் என்று முயன்றவை அனைத்தும் நினைவில் வராமலே விலகிப்போயின.

சில நாட்களுக்குப் பின், ஒரு தினம் மாலை வேளையில் தற்செயலாகவே அவளும் குழந்தை விஜயரங்கனும், தாதி அலர்மேலம்மாவும் வண்டியூர்த் தெப்பக்குள மைய மண்டபத்திற்குப் படகில் செல்ல வேண்டியிருந்தது.

அந்தச் சிறிது நேரப் படகுப் பயணத்தின் போதும் கூட ராணி மங்கம்மாள் ஏனோ மனநிம்மதியற்றிருந்தாள். அவளால் உடனிருந்த அலர்மேலம்மாளுடனோ மற்றவர்களுடனோ கலகலப்பாகப் பேச முடியவில்லை. கனவில் கண்டதே நிஜமாக நடந்து கொண்டிருப்பதைப் போன்ற பிரமை உணர்வில் தட்டுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

நடுத் தெப்பக்குளத்தில் படகு போய்க் கொண்டிருந்த போ கொஞ்சம் ஆட்டம் அதிகமாயிருந்த சமயத்தில்,

"அலர்மேலம்மா ஜாக்கிரதை... குழந்தையைத் தள்ளிவிடப் போகிறாய்... படகில், ஓரமாக வேறு உட்கார்ந்திருக்கிறாய்" என்று ராணி மங்கம்மாள் எச்சரித்தாள். அப்போது பதிலுக்கு வேடிக்கையாகச் சொல்லுவதாய் நினைத்துக் கொண்டு,

"உங்கள் பேரனை அவ்வளவு சுலபமாகத் தள்ளி மூழ்கச் செய்துவிட முடியாது அம்மா! அவன் மற்றவர்களைத் தள்ளிக்