பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ராணி மங்கம்மாள்

இளவரசரும் சின்ன ராணி முத்தம்மாளும் அடுத்தடுத்துக் காலமான துயரத்தினாலும் கவலையாலும் நாம் தளர்ந்திருந்தோம். திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்கு வேறு வந்து விட்டோம்."

"இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"சில சமயங்களில் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. எதிர்பாராதபடி ஏதாவது நடந்து விடுகிறது மாகாராணீ!"

"எதிர்பார்க்க முடிந்த அபாயங்களுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டியதோடு எதிர்பாராத அபாயங்களுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டியது என் கடமை."

"உண்மைதான் மகாராணி திரிசிரபுரம் கோட்டையை வளைத்து வெற்றி கொள்ளாமல் மைசூருக்குத் திரும்பமாட்டேன் என்று சிக்க தேவராயனிடம் சூளுரை கூறிய பின்பே குமரய்யா படைகளோடு புறப்பட்டிருக்கிறான் என்கிறார்கள். எப்படியோ இது நேர்ந்து விட்டது. சமாளித்தாக வேண்டும்."

"பேசிக் கொண்டிருக்கவோ, திட்டமிட்டுக் கொண்டிருக்கவோ நேரமில்லை. உடன் முற்றுகையை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்றாள் ராணி மங்கம்மாள்.

மதுரையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் படைகள் ஆயத்தமாயின. படைத் தலைவர்கள் போர்க்கோலம் பூண்டனர். படைகள் திரிசிரபுரம் நோக்கி விரைந்தன.

நல்ல வேளையாக ராணி மங்கம்மாளின் நல்வினை வயத்தால் மலைபோல வந்த துயரம் பணிபோல நீங்கிற்று.

குமரய்யா படைகளுடன் திரிசிரபுரத்தைப் பிடிக்க வந்த சமயத்தில் மைசூரை மராத்தியர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கவே, குமரய்யாவும் அவனுடன் வந்த பெரும் படையினரும் உடனே மைசூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மைசூருக்குத் திரும்பாத எஞ்சிய வீரர்களைத் திரிசிரபுரம் கோட்டையிலிருந்தவர்களே அடித்துத் துரத்தி விட்டார்கள். இந்தத் தகவல் தெரியச் சில நாட்கள்