பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

25

எதிரிக்கு உறைக்கும்படி எதிர்க்கவும் வேண்டும். என்ன செய்வதென்று முடிவைப் பள்ளிகொண்ட பெருமாளிடமே கேட்கப் போகிறேன் மகனே!".

"எப்படி அம்மா?"

"பூக்கட்டி வைத்துப் பார்த்தால் அரங்கன் முடிவைச் சொல்லுவான் அப்பா" அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே பல்லக்கு சந்தனமும் சண்பகமும் பச்சைக் கர்ப்பூர வாசனையும் மணந்து கொண்டிருந்த திருவரங்கமுடையானின் சந்நிதி முகப்பில் போய் இறங்கியது.


3. பாதுஷாவின் பழைய செருப்பு

ரவணையில் துயிலும் அரங்கநாதப் பெருமாளின் தரிசனம் கிடைத்ததோடன்றி, ராணி மங்கம்மாள் தன் மனத்தில் கருதிப் பூக்கட்டி வைத்துப் பார்த்த மிக முக்கியமான அரசியல் பிரச்னைக்கும் அந்தப் பெருமாளே வழிகாட்டி உதவவும் செய்தார். அவள் எண்ணியபடியே செய்ய அரங்கனின் உத்தரவும் கிடைத்தது. திரும்புகிற வழியில் திருவானைக்காவிலும், நகருக்குள் மலைக்கோயிலிலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அவர்கள் அரண்மனைக்குத் திரும்பும்போது உச்சிவேளை ஆகியிருந்தது.

மலையிலிருந்து கீழே இறங்கும்போதே, கோயிலில் உச்சி கால பூஜைக்கான மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

"மகனே! நான் உன்னிடம் எதைப் பேசநினைத்தேனோ அதைப் பேசத் தொடங்கும்போதே ஆலயமணியின் அருள் நாதம்கூட அதை ஆமோதிப்பது போல ஒலிக்கிறது. திருவரங்கத்துக்குப் போகும்