பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. இராயசம் அச்சையாவும்
ரகுநாத சேதுபதியும்

டில்லி பாதுஷாவின் பிரதிநிதி ஆத்திரம் அடைந்ததைக் கண்டு ரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் அவனை நோக்கிப் புன்னகை பூத்தான்.

"நெருப்புடன் விளையாடுகிறீர்கள் இதன் விளைவுகள் கடுமையாயிருக்கும் என்பதைச் சிந்திக்காமல் செயல்படுகிறீர்கள் என்பதை மீண்டும் வற்புறுத்த விரும்புகிறேன்" என்றான் பாதுஷாவின் பிரதிநிதி.

"தங்கள் பேரரசருடன் முன்பு நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கப்பம் கட்டுவதாக மட்டும் ஒப்புக் கொண்டது உண்மை. செருப்பை வணங்குவது அந்தப் பழைய உடன் படிக்கையில் அடங்காத ஒன்று. உடன்படிக்கைப்படி பார்த்தால் வரம்பை மீறுவது தங்கள் அரசரேயன்றி நாங்கள் இல்லை."

"வலிமை உள்ளவர்களுக்கு வலிமையற்றவர்கள் அடங்கித் தான் ஆகவேண்டும்."

"அடக்கம் வேறு; அடிமைத்தனம் வேறு."

"இதற்குப் பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை."

"முடிந்தால் செய்யுங்கள்."

இவ்வளவில் பாதுஷாவின் பிரதிநிதியும் உடன் வந்திருந்தவர்களும் வெளியேறி விட்டார்கள். படைகளையெல்லாம் மதுரையிலிருந்து அவசரப்பட்டு வடக்கே திருப்பியனுப்பி விட்டது எத்தனை பெரிய தவறு என்ற ஏக்கத்துடனே வேறு வழியில்லாத காரணத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் டில்லி திரும்பினான் ஒளரங்கசீப்பின் பிரதிநிதி, போகிற போக்கில் திரிசிரபுரம் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் படைவீரர்களால் நிரப்பப்பட்டு ஆயத்தமா