பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ராணி மங்கம்மாள்

குமரிப்பெண்னே இனிமேல் கல்யாணத்திற்கு மீதமில்லை என்கிறாற்போலச் செய்து விட்டார் சேதுபதி என நாட்டில் அவருக்கு ஒரு புகழும் ஏற்பட்டிருந்தது. அந்த மரத்தடியில் உலக்கையால் நெல்குத்தும் பெண்கள் மேலும் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டான் ரங்க கிருஷ்ணன்.

"எந்த ராசா எந்தப் பட்டணம் போனா என்னடி அம்மா? நம்ம சேதுபதி மகராசன் தயவுலே நமக்கு ஒரு கொறையும் வராதுடீ வேலம்மா."

"அது மட்டுமாடி? தெற்கத்திச் சீமையிலே எல்லா ராசாமாரும் நம்ம சேதுபதி பேரைச் சொன்னாலே நடுங்கறாகளாம்டி 'மங்கம்மா ராணி கூட நீங்க கப்பம் கட்டாட்டியும் போகுது எங்க ராச்சியத்தோட சிநேகிதமா இருந்தாலே போதும்னு' நம்ம சேதுபதி ராசாகிட்டச் சொல்றாளாம். உனக்குத் தெரியுமாடி சேதி?"

ரங்க கிருஷ்ணன் அங்கிருந்து தற்செயலாகப் புறப்படுவது போல் மெல்ல மெல்ல மேலே நகர்ந்தான். சேதுபதியை எதிர்க்கவும் எதிர்க்க நினைக்கவுமே ஈரேழு பதினான்கு புவனங்களிலும் ஆட்கள் இல்லை இருக்க முடியாது என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு அந்த மறவர் சீமை மக்கள் இருக்கிற நிலைமையை அவ்வுரையாடலில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது. இப்படித் திடமனமும் நம்பிக்கையும், எதற்கும் கலங்காத துணிவும் உள்ள மக்களே அவர்களை ஆள்கிறவனுக்கு ஒரு வரப்பிரசாதம் அல்லவா? கிழவன் சேதுபதிக்கு அப்படி மக்கள் வாய்த்திருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

அந்தி மாலை வந்தது. இரவும் வந்தது. நள்ளிரவும் கழிந்தது. இராமநாதபுரம் போன குதிரை வீரன் இன்னும் திரும்ப வரவில்லை. ரங்ககிருஷ்ணனின் குழப்பம் அதிகமாகியது. போன தூதனைச் சேதுபதியோ சேதுபதியின் ஆட்களோ பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்களோ என்றுகூடத் தோன்றியது. முந்திய இரவைப் போலவே அன்றும் ரங்ககிருஷ்ணனால் உறங்க முடியவில்லை. தூதனைப் பிடித்து வைத்துக் கொண்டதுமின்றி எந்த நேரத்திலும்