பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

91

"ஒரு பிரச்னையில் நமது எதிரியின் முடிவு சரியில்லையானால் அதே பிரச்னையில் நாம் சரியான முடிவெடுத்து மற்றவர்களின் அன்பையும் அநுதாபத்தையும் நம் பக்கம் திரட்ட வேண்டும். இப்பிரச்னையை இப்படி ஒரு நோக்கிலும் நான் கவனித்திருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது ராஜதந்திரப்போக்கான காரியம். மறவர் நாட்டிலும் கிழவன் சேதுபதியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் விதேசிகளும், கிறிஸ்தவர்களும் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப் பெற்றிருக்கிறார்கள். 'மங்கலம்' என்னும் மறவர் நாட்டு ஊரில் பிரிட்டோ பாதிரியாரும் அவருடன் வந்த ஆட்களும் பலவந்தமாகச் சிவலிங்க வழிபாடு செய்யும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்."

"அதற்குக் காரணம் அவர்களில் சிலர் சிவலிங்க வழிபாட்டை எள்ளி நகையாடிப் பேசியதால் நேர்ந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் பிறருடைய உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் அல்லவா? பிறரால் நாம் புண்படுகிற போது வருந்துவதும், பிறரை நாம் புண்படுத்துகிற போது மகிழ்வதும் சரியில்லையே?"

"நியாயம்தான்! தவறு செய்யும் ஒரு சிலர் எல்லாத் தரப்புகளிலும் இருப்பார்கள். அதற்காக எல்லாத் தரப்புகளுமே தவறானவை என்று முடிவு செய்து விடலாமா? சிவலிங்க வழிபாடு செய்ய மறுத்தார்கள் என்பதற்காகப் பிற மதத்தினரை மரங்களில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்ட கொடுமை சேது நாட்டில் நடந்திருக்கிறது. அதனால் தான் பிற சமய நிந்தனையைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன்."

"சேதுநாட்டில் மட்டும்தானா இப்படி நடந்தது? விதேசிகள் மேல் வெறுப்புள்ள இடங்களில் எல்லாம் இப்படித்தானே நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்?"

"இல்லை முத்தம்மா! நீ சொல்வது தவறு வெறுப்பு வந்துவிட்டால் அப்புறம் அது விதேசி சுதேசி என்றெல்லாம் வித்தியாசம் பாராது. இங்கே நம் திரிசிரபுரத்தில் புதிதாகக் கோயில்கள் கட்டப்பட்ட இடம் விதேசிக் கிறிஸ்தவர்களுடைய