பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ரெட்டியார்கள் ரெட்டியார்கள் ஆந்திராவிலிருந்து விஜயநகரப் பேரரசின்போது தமிழ் நாட்டிற்கு வந்து இராமநாதபுர மாவட்டத்தில் சாத்தூர், அருப்புக்கோட்டை வட்டங் களில் பரவலாக உள்ளனர். கரிசல் நிலப் பகுதியில் குடியேறி விவசாயம் செய் தனர். இவர்களது எண்ணிக்கைமிக்க கரிசல் குளம் என்ற ஊர் இதை வலியுறுத்துகிறது. புன் செய்ப் பயிர் களுள் கம்பு, வரகு, பருத்தி, ஆகியவை இவர்களது முக்கிய விளைபொருள்கள். தாய்மொழி தெலுங்கு. ஆனால்,இன்று தமிழுடன் கலந்து, கொச்சைத் தெலுங் கில்தான் பேசுகின்றனர். ரெட்டியார் என்ற பெயருள்ள ஊர்கள் வருமாறு: M. ரெட்டியபட்டி, சென்னப்ப ரெட்டி பட்டி, குமார் ரெட்டிபட்டி, குமார் ரெட்டியார் புரம். குறிப்பிடத்தக்க பிற ஊர்கள் இராமலிங்கபுரம், இராமசாமிபுரம், இராமச்சந்திரபுரம். ராஜாக்கள் ராஜாக்கள் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள தெலுங்கு பேசும் மக்களுள் எண்ணிக்கையால் குறை வாக இருந்தாலும் வரலாற்றாலும் உழைப்பாலும் குறிப்பிடத்தக்கவர்கள். அரசர்களை இந்திய அரசு ஒழித்தாலும் இராமநாதபுர மாவட்டத்தில் ராஜாக்கள் என்றும் இருப்பார்களென்று வேடிக்கையாகச் சொல்லு வது உண்டு. ராஜாக்களின் தாயகம் இராஜபாளையம் இவர்கள் 1565-இல் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள குண்டூர் மாவட்டத்திலிருந்து இராஜபாளையத்தில் குடியேறியவர் கள். வெளியூர்களில் வேலைபார்க்கவும் தொழில் செய்ய வும் ஒரு சிலர் தங்கியிருக்கின்றபோதிலும் இராஜபாளை