பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெற்றிருக்கிறார்கள். வேளாண்மைத் துறையில் நானூறு ஆண்டுகளாக இவர்கள் - குறிப்பாக பருத்தி வேளாணமையிலும் ஏலக்காய் பயிரிடுவதிலும் பழத் தோட்டம் போடுவதிலும் சிறப்படைந்திருக்கிறார்கள். தேனி முதல் அம்பா சமுத்திரமவரை மேற்குத் தெ டர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி முழுவதிலும் இவர்கள் மரவாணிபத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். காட்டு மரங்கள் வெட்டுவதில் இவர்கள் வல்லவர்கள். பஞ்சு ஆலைத் தொழிலில் நுணுக்கமான சில துறைகளில் முன்னேறியுள்ளனர். புததம் புதிய பல தொழில்களையும் இவர்கள் இராஜபாளையும் பகுதிக்குத் தந்திருக்கிறார்கள். முன்னேறிய வகுப்பு என்று அரசினர் கருதுவதால் கல்வித்துறையில் இவர்கள் அரசினரின் சலுகைகளைப் பெற இயலாது இருக்கிறார்கள். . ராஜாக்களுடைய வீட்டு மொழி தெலுங்கு. ஆனா இவர்களில் தமிழ் ஆர்வமும் தமிழ் அறிவும் நிரம்பியவர் இருக்கின்றனர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிமுக் குப் பேராசிரியக் கட்டில் இல்லாதிருந்த குறையைப் போக்கியவர் குமாரசுவாமி ராஜாதான். அதற்கு அவர் தம் பொருளையும் கொடுத்து உதவியுள்ளார். புரட்சிக் கவிஞர் என இன்று நாடும் ஏடும் போற்றிப் புகழும் புதுச்சேரி பாரதிதாசனாரை வரவழைத்துப் பாராட்டிப் பொற்கிழி வழங்கியவரும் குமாரசுவாமி ராஜா அவர் களேயாவர். ராஜாக்கள் சமூகத்தில் பெண் மக்களிடம் இன்னும் 'பர்தா' (முகமூடி) முறை இருந்து வருகிறது. நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைப் போல, ராஜாக்களும் திருமணமான பிறகு ஒவ்வொருவரும் தாய் தந்தையரிடமிருந்து பிரிந்து தனிக் குடித்தனம்