பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 103 நடத்துகிறார்கள். புதுமை என்ற ஒரு சடங்கு ராஜாக்கள் சமூகத்தில் உண்டு. சாமைக் கதிரை அறுத்து, எல்லா ராஜாக்களும் மாரியும்மன் கோவிலுக்குச் சென்று அங்கிருந்து ஊரெங்கும் தஙகள் சாதியார் வீடுகளுக்குப் போகவேண்டும். இவ்வா ஊர்வலமாகச் செல்லும் போது, தங்கள் பகைவராக இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கும் ஒவ்வொருவரும் போய்த்தான் ஆகவேண்டு மாம். இது புதுமைதானே: தேவாங்கர்: கன்னடமொழி பேசுபவர்களும் மாவட்டத்தில் இருக்கிறார்கள். இராமநாதபுர கொடுத்ததால் பெயர்பெற்ற இவ்வினத்தாரின் ஆதிசிவனுக்கு ஆடை செய்து தே + அங்க என்று தாயகம் மைசூர் மாநிலம். இவர்கள் பட்டு நெசவுத் துறையில் சேலம், கோவை, மதுரை நகர்களின் அச்சாணியாக விளங்குகிறார்கள். பூணூல் இவர்களுக்குக் கட்டாயமான அணிகலன். எல்லாச் சடங்குகளுக்கும் இவர்களிலேயே புரோகிதர் உள்ளனர். மறுமணம் செய்துகொள் கின்றனர். பெண்கள் பெரும்பாலோர் ஒவ்வொருநாளும் காலையில் நூல் வாங்கி பகலில் நெய்து மாலையில் துணி விற்று, இரவில் ணவு ஆக்குகின்றனர். இம்மாவட்டத்தில் இவர்கள் வாழும் ஊர் அருப்புக் அங்கு ஸ்ரீ ராமலிங்க சந்திர சௌடேசுவரி கோவிலைக் கட்டியிருககிறார்கள். கோட்டை.