6. போக்கு வரத்து சாலைப் போக்கு வரத்து இம்மாவட்டத்தில் 95 மைல்களுக்கு தேசிய நெடுஞ் சாலைகள் உள்ளன. கன்னியாகுமரியை இணைக்கும் நெடுஞ்சாலை இராமேசுவரத்தை இணைக்கும் நெடுஞ் சாலை ஆகிய இரண்டுமே இம்மாவட்டத்திற்குப் பயன் படுகின்றன. பல் மாநில அரசின் நெடுஞ்சாலைகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளன. மாவட்டச் சாலைகள் வற்றை அரசினர் ஆண்டுதோறும் ஒப்புக் கொண்டு அவற்றை அகலப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் அவற் றின்மீது புதிய பாலங்களைக் கட்டியும் வருகின்றனர். ஊராட்சி ஒன்றியங்கள் சிற்றூர்களை இணைக்கும் சாலைகளைப் போட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றியங் கள் ஏற்படுமுன், சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் யாத்திரைத் தலங்களுக்கும், செல்வர்கள் தங்கள் பகுதிச் சிற்றூர்களுக்கும், அரசினர் வணிக நகரங்களுக்கிடையே யும் சாலைகள் அமைத்தனர். எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லாத முதுகுளத்தூர் வட்டத்தில் கலகங் களுக்குப் பின்னர், 1958-இல் சாலைகள் போடுவதில் அரசினர் ஆர்வம் காட்டினர். . தொன்மையாக இம்மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை சேது ரஸ்தா என்பது. இது கடலோரமாக அமைந்தது. காசியிலிருந்து இராமேசுவரத்திற்கு வருபவர்களுக்காக ஏற்பட்டது. அமெரிக்காவில் நெடுஞ்சாலைகளில் பத்து மைலுக்கு ஒரு Motel (மோட்டர் ஹோட்டல்) இருப்பது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை