110 போல சேது ரஸ்தாவில் யாத்திரீகர் வசதிக்காக இரண்டு அல்லது மூன்று மைல்களுக்கு ஒரு சத்திரம் இருந்தது. சத்திரங்களின் சிதைந்த பகுதிகளை இன்றும் காணலாம். இந்தச் சாலையைச் சோழ அரசர்களும் பாண்டிய அரசர் களும் அமைத்தனர். பிற்காலத்தில் சரபோஜி போன் ற தஞ்சை மன்னர்கள் இதை நன்கு பேணினர். சேதுபதி கள் இம்மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் மதுரை மாநகரிலிருந்தும் சேது யாத்திரை வருபவர்களுக்கு சாலைகளும் சத்திரங்களும் பல தலைமுறைகளுக்கு முன்னரே அமைத்தனர். ராணி மங்கம்மாள் காலத்தில் சிறந்த சாலைகள் இம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போடப்பட்டு அவை இன்றளவும் மங்கம்மாளின் புகழ் மங்காதபடி நின்று நிலவுகின்றன. இவற்றுக்குப் பின்னர் 19 - ஆம் நூற்றாண்டின் இறுதி யில் கடல் கடந்த நாடுகளில் பெரும் பொருளீட்டியவர் கள் தாங்கள் வாழும் பகுதிகளிலும் தாங்கள் திருப்பணி செய்த தலங்களிலும் பல சாலைகளைத் தங்கள் செலவில் அமைத்தனர். பல பாலங்களும் கட்டினர் அவற்றைப் புதுப்பிக்கும்போது. பொதுப் பணித்துறையினர் நன்கொடையாளர் பெயர்க் கற்களை அகற்றிவிடுகின் றனர். புதுப்பிக்கப் பெற்ற பாலங்கள் அரசியல் தலைவர் கள் பெயரைப் பெறுவதும் இந்நாளில் நடை முறை. வைகையாற்றுக்குக் குறுக்கே மானா மதுரையிலும் பரமக்குடியிலும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சிறந்த முறையில் பாலங்கள் கட்டியுள்ளனர். பெரும் பாலும் சேது ரஸ்தாவை ஒட்டி இப்போது இந்திய அரசு East Coast High way அமைத்து வருகிறது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை