பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி, மொத்தம் 750 மைல் சென்று சென்னைத் துறைமுகத்தை அடைகின்றன. இந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து கிழக்குக் கரைக்குச் செல்லும் கப்பல்களும் இவ்வாறே இலங்கையை வலம் வருகின்றன. கடலுள் திட்டு இருக்கும் காரணத்தால் தூத்துக்குடிக்கு வரவேண்டிய இக்கப்பல்கள் அங்கு வராமல் கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்துகின்றன. சேதுக் கடலை ஆழப்படுத்தினால் பெரிய கப்பல்கள் செல்ல இயலும். இதற்குக் கால்வாய் வெட்டவேண்டும். இந்தக் கால்வாய் இந்தியாவுக்குச் செல்வம் தரும் கருவூலமாக இருக்கும். மண்டபத்துக்கும் உச்சிப்புளிக்கும் இடையே 5,400 அடி நீளம், 150 அடி அகலம், 32 அடி ஆழத்தில் ஒரு கால்வாயை வெட்டலாம். இந்தக் கால்வாய்தான் சேதுசமுத்திரக் கால்வாய் என்று குறிப்பிடப்படுகிறது. சேதுசமுத்திரம் கால்வாயிலிருந்து தூத்துக்குடித் துறைமுகம் 82 மைல். இக் கால்வாய் வெட்டப் பெற்றால் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குச் செல்லும் கப்பல் களுக்கு 434 மைல் (700 கி. மீ ) குறையும். இவ்வாறே 500 கீழ்க்கண்ட துறைமுகங்களுக்குச் செல்லுவதற்கு கி.மீ. முதல் 65 கி. மீ. வரை குறையும். . விசாகபட்டினம் கல்கத்தா சிட்டகாங் (பங்களாதேஷ்) 500 கி.மீ. 427 கி.மீ. 350 கி.மீ. 250 கி.மீ. 65 கிமீ. இரங்கூன் சிங்கப்பூர் சேதுசமுத்திரம் கால்வாயின் தெற்கு வாயிலாகத் தூத்துக்குடித் துறைமுகம் அமையும். அத்துறைமுகத்