பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 117 இத்திட்டத்தினால் கொச்சி, தாக தூத்துக்குடி, பட்டினம், கடலூர், சென்னை. விசாகபட்டினம் துறை முகங்களுக்கிடையே வர்த்தக இணைப்பு ஏற்படும். தூரக் கிழக்கு நாடுகள் மற்றும் வெளி நாட்டுக் கப்பல்கள், நம் துறைமுகங்களுக்கு வந்து நிலக்கரியை யும் தண்ணீர் வசதியும் பெற்றுப் போகும். புதிய கால்வாய்ப் பாதையில் சென்றால் பத்து நாட் (Knot- Nautical mile- 6080 ft) வேகமுள்ள சரக்கு ஏற்றிச் செல் லும் கப்பல்களுக்கு ஒன்றரை நாள் பிரயாணம் குறை கிறது. இதனால் ஒரு கப்பலுக்கு, செலவில் ரூ10,000 மீதப்படுகிறது. சிக்கனமான டீசல் எண்ணெயில் இயங்கும் மிகப் பெரிய கப்பலுக்குக் கூட ரூ.5,000 வரை மீதப்படும். விரைவான போக்கு வரத்தால் சரக்கு ஏற்றுபவர்களும் கப்பல் சொந்தக்காரர்களும் அடை யும் லாபம் மிகப் பெரிது. இக்கால்வாயை உபயோகப் படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதித்து கால்வாய் வெட்ட ஏற்படும் செலவை 25 ஆண்டுகளில் ஈடுகட்ட லாம். இந்தத் தொகை வெளிநாட்டுச் செலாவணியாகக் கிடைக்கும். இத்திட்டத்தால் இராமநாதபுர மாவட்டத்தின் பிற்போக்குத் தன்மை மாறும். இலங்கையில் குடி யுரிமை மறுக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ளவர். களுக்குப் புது வாய்ப்பு ஏற்படும். கால்வாய் வெட்டும் போது தோண்டி எடுக்கப்படும் மண், பாறை ஆகிய வற்றைக் கொண்டு இராமேசுவரம் தீவின் கரைகளைக் கெட்டிப்படுத்தி இராமேசுவரத்தையும் தனுஷ்கோடியை யும் கடல் அரிப்பினின்றும் காப்பாற்றலாம். இத்திட்டத்திற்குப் பத்துக்கோடி ரூபாய்ச் செலவு ஆகுமென்று இராசாமி முதலியார் குழு கருதிற்று