பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 முப்பது கோடி ரூபாய்க்குக் குறைந்து இந்தக் கால் வாயை வெட்ட இயலாது என்றும் அவ்வளவு தொகை செலவிடக்கூடியவாறு நிதி நிலைமை திருந்தும் வரை கால்வாய்த்திட்டம் காத்திருக்க வேண்டு மென்றும் இந்திய அரசு அப்போது அப்போது அறிவித்தது. இப்போது (1912-இல்) செலவு இன்னும் கூடுதலாக இருக்கும். எனினும் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண் டும். நம் நாட்டின் கடல் வாணிபமும் கடற்படையும் பெருகிவருவதால் சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றுவதும் கடற்படைத் தளமாக மண்டபத்தை அமைப்பதும் நம் நாட்டிற்கு நலம் பயக்கும். இத்திட்டத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரி விக்கும் என்ற கருத்து இந்திய அரசுக்கு இருந்திருக்கக் கூடும். ஐக்கிய நாடுகள் அவையில் பங்களாதேஷ் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை வாக் களித்திருப்பதாலும், இந்தியாவுக்கு எதிராகக் சீனா வுடன் இலங்கை நெருங்கிய உறவு கொண்டிருப்ப தாலும் இலங்கையின் கருத்தை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. தம் நாட்டின் நலனுக்கேற்பத் திட்டங்களை நிறைவேற்றுவதே ஒரு நாட்டின் வளர்ச் சிக்கு ஏற்றது. இக்கால்வாயை வெட்டலாமென்று முதலில் கருத் துத் தெரிவிக்கப்பட்டு + 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை முதலில் கூறியவர் ஆர். சி. பிரிஸ்டோ (Bristow) என்ற துறைமுகப் பொறியியல் அறிஞர். அவருக்குப் பிறகு இத்திட்டத்தை ஆய்ந்த Mr. Townshend of Plymouth என்பவர் இதற்கு 14 லட்சம் பவுன் செல வாகுமென்று கணக்கிட்டார். பின்னர் 1862 இல் Sir J.D.Elphinstone வேண்டுகோளுக்கு இணங்க பிரிட்டிஷ் பாராளுமன்றம், இதைப் பற்றி ஆராய ஒரு