பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பல நூற்றாண்டுகளுக்குமுன் இராமேசுவரம் தீவு இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பரப்பாக இருந்து கடல் கொந்தளிப்பால் பிரிந்து தீவாயிற்று என்பர். இக் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கால்வாயில் படகுகள் செல்லவில்லை. ஐரோப்பிய நாடு களில் டச்சுக்காரர் கப்பல்கள் செல்லும் கால்வாய்களை அமைப்பதில் அனுபவம் உள்ளவர்கள். அவர்களைக் கொண்டு 1828-இல் லூசிங்டன் என்ற கவர்னர் பாம் பன் கால்வாயை அகலப்படுத்தினார். ஆழத்தையும் மேலும் 15 அடி கூடுதலாக வெட்டினார். 1837 முதல் படகுகளும் சிறு கப்பல்களும் இக் கால்வாயில் செல்லு கின்றன. இக்கால்வாய் மணற் பாறைகளின்மீது அமைந்தது. இதன் நீளம் பன்னிரண்டு மைல். இந்தப் பன்னிரண்டு மைல் தொலைவில் சில இடங்களில் தண்ணீரின் அளவு ஒன்றரை ஆள் மட்டமே. பாம்பன் பாலம்: இரயில் நிர்வாகத்தார், ஒவ்வொன்றும் நாற்பது அடி நீளமுள்ள 145 கணவாய்களைக் கொண்டு இப்பாலத் தைக் கட்டியிருக்கிறார்கள். இதற்கு வேண்டிய கல்லும் காங்கிரீட்டுக்குச் சிறு கற்களும் 170 மைலுக்கு அப்பால் மலைப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. கான் கிரீட் கலவைக்கு மணல் 70 மைல் தொலைவிலிருந்து தனி இரயில்களில் வந்தது. 1911-ஆம் ஆண்டு சூன் மாதம் வேலை தொடங்கி 1913-ஆம் ஆண்டு சூவை மாதம் வேலை முடிந்தது. இடையில் வ கிழக்குப் பருவக் காற்றல் ஏற்பட்ட புயல்களால் ஆறு மாதங் களுக்கு வேலை நிறுத்தி வைக்கப் பெற்றது. 4,000 டன் சிமெண்டு, 1.36.100 c. ft களிமண், 1,80,000 c.ft., 1,03,00 c.ft., 80,000 c.ft