பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அந்த இடத் போருக்குப் பிறகு அது மூடப் பெற்றது. தில் இப்போது கால் நடைப் பண்ணை இருக்கிறது. ரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கடற் படையை ரோந்து' பார்க்கும் ஆகாய விமானிகள் இறங்க வேண்டியது ஏற் பட்டால், அப்போது பயன்படு வதற்காக இராமநாதபுரம் நகருக்கும் மண்டபத் திற்கும் இடையே உச்சிப் புளி (வாலாந்தறுவை) என்னு மிடத்தில் ஒரு சிறு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அது இப்போது பயன்படுத்தப்பட வில்லை. எனினும் அது கடற்படை வளர்ச்சி கருதி ஓரளவு பேணப்பட்டு வருகிறது. ம் மதுரை விமான நிலையம், இராமநாதபுர மாவட்ட எல்லையிலி தந்து (அருப்புக் கோட்டைச் சாலையிலுள்ள காவியூரிலிருந்து) 12 கி மீ. தொலைவிலுள்ளது. அஞ்சல் நிலையங்கள்: இம்மாவட்டத்தின் பெரும் பகுதி 1956 வரை மதுரை போஸ்டல் டிவிசனில் இருந்தது. 1956 இல் இராமநாதபுரம் போஸ்டல் டிவிசன் உண்டாக்கப் பெற்றது. இந்த டிவிசனின் தலைநகர் இராமநாதபுரம். ஒரு முது நிலைக் கண்காணிப்பாளர் (S.S.P) இதன் தலைவராக உள்ளார். புதுக்கோட்டை போஸ்டல் டிவிசனில் இருந்து வரும் சில அஞ்சல் நிலையங்களை இராமந தபுரம் டிவிசனுக்கு மாற்ற ஏற்பாடு நடந்து வருகிறது. F 1970 செப்டம்பரில் இராமநாதபுரம் போஸ்டல் டிவிசனின் ஒரு பகுதியான சாத்தூர்,ஸ்ரீ வில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை வட்டங்கள் பிரிக்கப்பட்டு விருது நகர் டிவிசன் தோன்றியது. ஏறத்தாழ 1,000 அஞ்சல் நிலையங்கள் இரண்டு டிவிசன்களிலும் உள்ளன. முது