பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 அன்றாட உபயோகத்திற்கும் ஆடம்பர வாழ்வுக்கும் வெளிநாட்டுப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் இம் மாவட்டத்தில் வெளிநாட்டுத் தொடர்புடைய எல்லாச் சமூகங்களிலும் அளவு கடந்து பரவியிருக்கிறது. வாணி கத்திற்காக இவற்றை வரவழைப்பதில் கீழக்கரை. அபிராமம், இளையாங்குடி, கமுதி முஸ்லிம்கள் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்றநிலையை அடைந்துள்ள னர். இவ்வாறு வெளிநாட்டுப் பொருள்கள் கிடைப் பதால் தஞ்சை மாவட்டத்திலுள்ள சில ஊர்களைப்போல இவ்வூர்களும் சின்னச் சிங்கப்பூர் என்று பெயர் பெற்றிருக்கின்றன. இவர்களில் பலர் 1942-க்கு முன் இரங்கூனிலும் பின்னர் சென்னை மாநகரிலும் கைலி வாணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுப் பொருள்கள் வகை வகையாகவும் அடுக்கடுக்காகவும் திருமணங்களில் மணமக்களுக்கு அன்பளிக்கப்பெற்று திருமணத்திற்கு முதல் நாள் பொருட் காட்சிகளாகப் பலருக்கும் பார்வையில் வைக்கப் பெறுகின்றன. இம்மாவட்டத்தின் சில பகுதி களில் இது காணவேண்டிய ஒரு காட்சி. இவ்வாறு தேவைப்பட்டாலும் படாவிட்டாலும் பொருள்களை வாங்குவதால் வாழ்ந்த வீடுகளையே பிரித் துக் கட்டிடப் பொருள்களாகிய சன்னல், கதவு, மரநிலை கள். கம்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் சூழ்நிலை இம்மாவட்டத்தில் நிலவுகிறது. . வெள்ளி, தங்கம், வைரம் வியாபாரங்களுக்கும் இம் மாவட்டம் புகழ்பெற்றது. சென்னை ஸ்டாக் எக்சேஞ்ச் என்னும் பங்கு மார்க் கெட்டில் பேரம் நடைபெறும் தொழிற்சாலைப் பங்கு களை விற்பதும் வாங்குவதும் காரைக்குடியில் நடை பெறுகிறது.