8. தொழில் வளர்ச்சி இயந்திரத் தொழில்கள்- பழைய கருத்தும் புதிய கருத்தும்: தொழில் என்று குறிக்கும்போது இந்நாளில் சில எண்ணங்கள் நமக்கு ஏற்படுகின்றன. பல ஆயிரம் தொழிலாளர், பல கோடி ரூபாய் முதலீடு. வெளிநாடு களிலிருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம். இவ்வகைத் தொழிற்சாலைகள் இராமநாதபுர மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஓரளவு உருவாகி வருகின்றன. ஆனால், இத்தகைய தொழில் கள் இராமநாதபுர மாவட்டத்தார்க்குப் புதியன அல்ல. பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இவைபோன்ற பெரிய தொழில் களை இராமநாதபுர மாவட்டத்தார் தொடங்கிச் சிறப் பாக நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்கள் மாவட்டத்திலேயே தொழிற் சாலைகளை ஏன் தொடங்கியிருக்கக் கூடாது? ஒரு தொழிலை எங்கு நடத்தினால் அதற்கேற்ற மூலப் பொருள்கள் கிடைக்கும்? எங்கு நடத்தினால் உற்பத்தி யான் பொருளை விற்பது எளிது? எங்கு நடத்தினால் தண்ணீர் வசதி, இயந்திரங்களைப் பழுது பார்ப்பதற் கான வாய்ப்பு ஆகியவை இருக்கும்? சுருங்கச் சொன் இலாபம் கூடுதலாகக் கிடைக்கக் கூடிய இடம் எது? னா ல்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/140
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை