பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 விலைக்கு வாங்குகின்றன. அந்த ஆலைகளுக்கே வழக்க மாக விற்கும் உழவர் குழுக்களும் தொழிற்சாலைகளும் உள்ளன. (2) அறவைத் தொழில்: இம்மாவட்டத்தின் உற் பத்திப் பொருள்களில் மணிலாக் கடலை முக்கியமானது. கடலை அறைக்கும் ஆலைகள் நூற்றுக்குமேல் உள்ளன இதில் சிங்கம் புணரியும், எள் அறைப்பதில் விருதுநகரும் சிறந்து திகழ்கின்றன. தஞ்சை மாவட்டத்திலிருந்து நெல் வரவழைத்து அறைப்பது புதுவயலில் ஒரு பெரிய தொழிலாக வளர்ந்திருக்கிறது. வெளி மாநிலங்களி லிருந்து வரும் பலவகைப் பருப்புக்களை விருதுநகரில் உடைக்கிறார்கள். (3) தென்னை ; ராமநாதபுர மாவட்டத்தின் கரையோரப் பகுதி, தென்னை பயிரிட ஏற்றது. உச்சிப் புளியிலும் பாம்பனிலும் சிங்கம்புணரியிலும் பல ஆண்டு களுக்கு முன் அரசினர் தென்னை நாற்றுப் பண்ணைகளைத் தொடங்கினர். விற்பனைக்காக இவற்றில் தேர்ந்தெடுக் கப் பெற்ற நெற்றுக்களிலிருந்து உயர் ரகக் கன்றுகள் உற்பத்தி செய்யப் பெறுகின்றன. இலங்கையிலிருந்து பயிரிட்டு வரும் அகதிகள் தென்னை வாழ்வதற்கு அவர்களுக்கு அரசினர் நிலம் ஒதுக்கியும் தென்னைப் பண்ணை உருவாக்குவதற்கு சில வசதிகள் செய்தும் ஊக்குவிக்கின்றனர். (4) கடலோரத் தொழில்கள் : கடலோரமாக உள்ள 45 ஊர்களில் மீன் பிடித்தால் பெரிய தொழில். ஆத்தங் கரை, மூக்கையூர் என்ற ஊர்களில் மீனைப் பாடம் செய் யும் தொழில்கள் இயங்குகின்றன. கடற்பாசியிலிருந்து பல பொருள்களைச் செய்ய லாம். 'அகர்' என்று சொல்லப்படும் பாகு போன்ற