142 இவ்வாறே சிவகாசியில், தாளிலிருந்து விசிறிகள் செய்யப் பெறுகின்றன. நூல் ஆலைகள்: இம்மாவட்டத்தில் ஏராளமான நூல் ஆலைகள். பெரும்பாலும் பருத்தி விளைவிலும் ஆராய்ச்சியிலும் சிறந்த இராஜபாளையத்தில் உள்ளன. இந்த ஆலைகளின் பெயர்கள் வருமாறு: ஜானகிராம் மில்ஸ், இராஜபாளையம் மில்ஸ், அழகப்பா காட்டன் மில்ஸ், ஜயராம் மில்ஸ், ஸ்ரீஷண்முகர் மில்ஸ், ஸ்ரீபாரதி காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ். இவற்றுள் மிகப் பெரியது தொழிலரசர் பி.ஏ.சி. இராமசாமி ராஜா தொடங்கிய இராஜபாளையம் மில்ஸ் முரட்டு நூல்கள் முதல் மிக மெல்லிய நூல்கள் வரை இங்கு நெய்யப் பெறுகின்றன. இதே குழுவின் ஆட்சியில் 1942 முதல் நடைபெற்று வரும் இராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில்ஸ் என்பது 1939இல் என்.கே. இராமராஜு என்பவரால் இராஜ பாளையத்தில் தொடங்கப் பெற்றது. புண்களுக்குக் கட்டு வதற்கு உதவும் பேண்டேஜ் துணி முதலியன (Anti septic Surgical Dressings like Absorbent Cotton wool, Absorbent Gauze, Surgical Bandages and Plaster of Paris) செய்யப் பெறுகின்றன. தென்னிந்தியாவில் இத்தகைய ஆலை இது ஒன்றே. இந்த ஆலை இப்போது புதிய இயந்திரங்களுடன் இராஜபாளையத்திற்குத் தெற்கே 13 கி. மீ தொலைவில் 13கி.மீ
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை