149 தொழிற் சாலைக்கும் அரசினர் ஆதரவு கோரப் பெற்றது. பின்வரும் தொழிற் சாலைகள் அமைய இராம நாதபுர மாவட்டம் பொருத்தமானது என்றும் விளக்கப் பெற்றது: விருதுநகர்: பம்பு செட்டு, புல்லி (Pulley), எடைக் கருவிகள் (Cast iron weights). மாவு ஆலைக் கருவிகள், சிலவகை உருளைகள் (Mhote wheels). இராஜபாளையம்: நூல் ஆலைக் கருவிகள். எண்ணெய் ஆலைக் கருவிகள், லேத்துப் பட்டறைகள். திருத்தங்கல்: தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய கருவிகள். காகிதம் வெட்டும் இயந்திரங்கள், புகையிலை வெட்டும் இயந்திரங்கள், நூல் சுற்றிவைக்க உதவும் இயந்திரங்கள். சிவகாசி: லித்தோ அச்சகங்களுக்குத் தேவையான அச்சுமை, தீக்குச்சித் தொழிலுக்கு இன்றியமையாத வெடி மருந்துகள். சிவகங்கை, மானாமதுரை : ஓடு, செங்கல் தொழிற் சாலைகள். காரைக்குடி: மின்சார இரசாயன ஆராய்ச்சியைப் பயன்படுத்தும் தொழில்கள். மின்சார இரசாயனத் தொழில்கள் : கருத்தரங்கு அன்று மக்னீசியம் செய்வதற்கான ஒரு லை சிறு ஆலைக்கு அடிக்கல் நாட்டப் பெற்றது. இந்த ஆ காரைக்குடியில் மத்திய மின் இரசாயன ஆய்வுக்கூட வட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கு சேலம் மக்னீ சைட்டிலிருந்து மக்னீசியம் பிரித்து எடுக்கப் பெறுகிறது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/151
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை