பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குகின்றன. இதனால் இத்தொழில்களில் ஈடுபட்டிருப்ப வர்கள் செல்வத்தில் திளைக்கின்றனர். இப்பகுதி தூத்துக் குடித் துறைமுகத்திலிருந்து 100 கி மீ. தொலைவினதே. ஒரு காலத்தில் இலங்கை, தமிழ்நாட்டோடு சேர்ந்த நிலப்பரப்பாக இருந்தது. பிற்காலத்தில் கடல் நீர் புகுந்து, இரு பகுதிகளாயிற்று. இதனால் இலங்கைத் தீவு உண்டாயிற்று என்பர். இலங்கைக் கரையோரத்தில் 7கி.மீ.தொலைவுக்கு கடலின் ஆழம் ஓர் ஆள் மட்டமே இருப்பதால் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். பாலை: -இராமேசுவரம் தீவு, பாலை நிலப் பகுதி யாகும். 'முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலையென்பதோர் படிவங் கொள்ளும்' என்று சிலப்பதிகாரம் (காடு காண் காதை) கூறுமா யினும் அவை திரியாது ஏற்பட்ட பாலைவனம் உண்டு என்பதற்கு இப்பாலை ஓர் எடுத்துக் காட்டாய் அமைந் துள்ளது. பழமைப் பெருமை இராமநாதபுரம் சீமையின் தொன்மையும் வரலாறும் பாரிவள்ளலின் வரலாறும் மாவட்டத்திற்கே அழியாப் புகழ் தருவன. பிள்ளையார் பட்டியும் இராமேசுவரமும் திருவுத்தர கோச மங்கையிலுள்ள மரகத நடராசர் திருவுருவமும் பல்வேறு அரசர்கள் சிற்றரசர்களின் கலையார்வத்தை யும், தமிழ் மக்களின் கலைத்திறனையும் உலகுக்கெல்லாம் உணர்த்துவன்.