164 நகரிலிருந்து ஜஸ்டிஸ் கட்சி இம்மாவட்டம் எங்கும் பரவிற்று. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தூண்டுதலால் ஜமீன்தார்கள் இக்கட்சியை ஆதரித்தனர். 1917-க்குப் பிறகு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முயற்சியால் செட்டிநாட்டுப் பகுதிகளில் தேர்தல் காலங்களில் இக் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப் பெற்றார்கள். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைப் பற்றி விடுதலை யக்கம் என்ற தலைப்பில் கூறுவோம். பொதுவாகச் சொல்லுமிடத்து தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி கால் கொண்ட மாவட்டங்களுள் இராமநாதபுரம் முக்கிய மானது. சுதந்திரத்திற்குப் பிறகு எல்லா மாவட்டங் களிலுமே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந் தது. இராமநாதபுர மாவட்டத்தில் சற்று வேகமாகச் சரிந்தது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் முதுகுளத்தூரில் கலகங்கள் நடைபெற்றதும் அதை ஒடுக்க காமராஜ் அமைச்சரவை கடுமையாக நடவடிக்கை எடுத்ததும் எனலாம். முக்குலத்தோர் பெரு மக்களின் முடிசூடா மன்னராக விளங்கிய பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகினார். அதனால் இம் மாவட்டத்தின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் ஆதரவை காங்கிரஸ் இழந்தது. பல இனத்தார்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத் தின் மீதும் அதில் பிறந்த தலைவர் மீதும் வெறுப்புக் காட்டத் தொடங்கினர். முத்துராமலிங்கத் தேவர் பார்வர்டு பிளாக் கட்சியை தமிழ் நாட்டில் பரப்பி அதன் ஒப்பற்ற தலைவ ராக விளங்கினார். அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப் பெற்ற எவரும் இதுவரை தோல்வி அடைந்ததில்லை. தேவரும் அவருக்குப் பிறகு அனைத்து இந்திய பார்வர்டு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/166
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை