பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நம் எஜமான்களாகிய வோட்டர்கள் இத்தனைபேர் நிற்கும் போது, நாம் மட்டும் நாற்காலிகளில் உட் காருவது சரியல்ல, எல்லாரும் தரையில் விரிப்பு உட்காருவோம், என்றார் விரித்துச் சரிசமமாக ஸ்ரீ கருமுத்து சிவலிங்கம். அவ்வாறே நடந்தது! தங்கள் கட்சி இழந்த செல்வாக்கினை மீண்டும் நிலை நாட்ட விரும்பி, ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை மாவட்டக் கழகங்களை இரண்டாகப் பிரித்து, நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்சியின் செல்வாக்கை உறுதிப் படுத்திற்று. இராமநாதபுர மாவட்டக் கழகம் மூன்றரைத் தாலூக்காக்களைக் கொண்ட தெற்கு ராமநாதபுர மாவட்டக்கழகமும் ஐந்தரைத் தாலு காக்களைக் கொண்ட வடக்கு இராமநாதபுர மாவட்டக் கழகம் என இரண்டாக்கப் பெற்றது. ராஜாஜி முதலமைச்சரான பிறகு இவை இணைக்கப் பெற்றன. காமராஜ் ஆட்சியின் இறுதிக் காலத்தில் மாவட்டக் கழகங்கள் ஒழிக்கப் பெற்று அவற்றின் அதிகாரங்கள் 1961-இல் புதிதாக ஏற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாற்றப் பெற்றன. இராமநாதபுர மாவட்டக் கழகத்தின் கடைசித் தலைவராக இருந்த எஸ். இராமசாமி நாயுடு காலத்தில் மாவட்டமெங்கும் ஏராளமான உயர் நிலைப் பள்ளிகள் ஏற்பட்டன. போலீஸ் ஆட்சி: 2 பல ஆண்டுகளுக்கு முன் நடை பெற்ற கலகங் களால் சிவகாசி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் தமிழக அரசு ஆயுதம் தாங்கிய படைகளை நிலையாக வைத்திருக்கிறது.