172 மாவட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் இராம நாதபுர மாவட்டத்தின் பெரும்பகுதியை புதிதாக ஏற் படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சேர்த்துவிடலா மென்றும் பலர் கருத்துத் தெரிவித்தனர். புதுக் கோட்டையில் அரண்மனைகள், நீதிமன்றத் தலைமைக் கட்டிடம், பழைய திவானின் அலுவலகம், தலைமை மருத்துவ மனை, சிறை, அரசாங்க அச்சகம், காட்சிக் கூடம், கருவூலம் யாவும் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாமென்றும் தெரிவிக்கப் பெற்றது. அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து தேர்தல் காலங்களில் உறுதி மொழிகள் கொடுத்தும், அரசினர் அதை நிறைவேற்றவில்லை. 1933-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சட்டமன்றத்தில் இதைப்பற்றி விவாதங்கள் நடந்தன. 1970-இல் தி.மு.க. அரசு,மானாமதுரை அருகே சிவகங்கைச் சாலையில் புதிதாக ஒரு நகரை அரசினர் செலவில் உருவாக்கவும் இராமநாதபுர மாவட்ட அலுவலகங்கள் எல்லாவற்றையும் அங்கு மாற்றிவிடவும் திட்டமிட்டது. விருதுநகர், இராஜபாளையம் பகுதி மக்கள் இவ்வேற்பாட்டை எதிர்த்தனர். விருதுநகரி லேயே மாவட்டத் தலைநகர் இருக்க வேண்டுமென்பது விருது நகர்ப் பகுதியில் பரவியுள்ள கருத்து. மதுரையி லேயே தொடர்ந்து இருக்கட்டுமென்பது இராஜபாளை யத்தாரின் ஆர்வம். இதன் விளைவாக தி.மு.க. அரசு. திட்டத்தைக் கைவிட்டது. ஒரே தலைநகரைப் பெறுவதற்கு இம்மாவட்டத்தின் நீண்டு வளைந்த அமைப்பு ஏற்றதாய் இல்லை. எங்கு புதிதாகத் தலைநகர் அமைத்தாலும் சில பகுதியினருக்கு அதனால் இன்னல்கள் ஏற்படத்தான் செய்யும்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை