பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய சிவா: 178 தேசிய இயக்கம் பெரிதும் பரவுவதற்கு சுப்பிரமணிய சிவா காரணமாய் இருந்தார். இம்மாவட்டத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை, தேசபக்தர் சா.கணேசன், இந்து மதாபிமான சங்கப் பொன்விழா மலரில் பின் வருமாறு விவரிக்கிறார்; "1920-ஆம் ஆண்டு தென்னகத்தில் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய தேசபக்திக்கனல், காந்தி யத்தால் வெம்மை குறைந்து நேர்மை அரும்பிய காலம். அந்தக் காலந்தான் காரைக்குடியின் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட காலம். வித்திட்டவர் சிவாதான். வித்திட்ட இவர் காரைக்குடியையே தமது முகாமாகவும் ஆக்கிக் கொண்டார். தேசப் பணிக்குத் தாம் இட்ட வித்து, முளைத்துத் தழைத் துக் கிளைக்க நீர்பாய்ச்சி, உரமிட்டும் வந்தார்." "எங்கெல்லாம் கூட்டம் சேருமோ அங்கெல் லாம் சிவா எழுந்தருளியிருப்பார். தேர்த்திரு விழாக்கள் இவர் பிரசங்கத்திற்குக் கூட்டம் சேரப் பேருதவியாயிருந்திருக்கின்றன.' அவருடைய உரையில் நெஞ்சம் குமுறும். குறுதி கொதிக்கும். நாடி துடிக்கும். "இந்த உரையை நான் அரியக்குடித்தெப்பத் திருவிழாவில் வடமேற்கு மூலையில் சிவா பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். சில ரூபாய்க்குத் திலகர் சுயராஜ்ய நிதி- காந்தி நோட்டுக்களையும் வாங்கினேன். 1942-இல் போலீசார் என் வீட்டைச் சூரையாடியதற்கு முன்வரை அந்நோட்டுக்கள் என்னிடம் பத்திரமாயிருந்துவந்தன." .