181 மாவட்டக் கழகத் தேர்தல்களில் பெரும் திர்ப்பை இக்கமிட்டி சமாளித்து, அனைத்திந்தியா விலும் புகழ் பெற்றது. பள்ளத்தூர், நெற்குப்பைத் தொகுதிகளில் 1936-இல் நடைபெற்ற தேர்தல்களில் போட்டி கடுமையாக இருந்தது. அவற்றில் போட்டி யிட்ட காஙகிரஸ் வேட்பாளர்கள் நாகப்பாவும் வள்ளியப்பாவும் ஆவர். அவர்கள் தொடுத்த வழக்கு களும் அவ்விருவராலும் தேசிய இயக்கம் பரவியதும், தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு பகுதியாக இடம் பெற்றுள. நிர்மாண இயக்கம்: பதினான்கு அம்சங்கள் கொண்ட ஆக்கவேலைத் திட்டத்தை காந்தியடிகள் வற்புறுத்தினார். அதைப் பரப்ப இந்திய நாடெங்கும் காந்தி ஆசிரமங்கள் தோன்றின. பிற்காலத்தில் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவராக விளங்கிய ப.ஜீவானந்தம், செட்டிநாட்டு அரண்மனை சிறுவயலில் ஒரு காந்தி ஆசிரமம் நிறுவினார். இதைப் பார்த்து மகாத்மா காந்தியே பெரிதும் உள்ளம் நெகிழ்ந்தார். காந்தியடிகளின் கொள்கைகளில் ஈடுபட்டவர் களில் செக்காலை, காந்தி மெய்யப்பர் (1886–1957) முக்கியமானவர். இவர் காரைக்குடியில் நடைபெற்ற தமிழ் மாகாண அரசியல் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராயும் சர்வோதய சமாஜத்தலைவராயும் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டும் குழுவின் தலைவராயும் இருந்தார். திரைப்படங்கள்: திரைப்படங்கள் மூலம் தேசியக் கனலை வளர்த்த தொண்டில் இம்மாவட்டத்தார் பங்கு பெரிது. தமிழ்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/183
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை