இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
185 மலாயா இந்தியர் ப காங்கிரசைப் பெரியதொரு அமைப்பாக ஆக்கி அதன் தலைவராகவும் இருந்தவர், பள்ளத்தூர் 'அட்வகேட் கா. இராமநாதச் செட்டியார் ஆவார். வெளி நாடுகளின் சுதந்தா இயக்கங்கள் இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைக்கு இணங்க, ஸ்பெயினில் சர்வாதிகாரக் குழுக்களுக்கு விரோதமாக உள் நாட்டுக் கலகத்தில் மக்களாட்சி இயக்கத்தில் இம் மாவட்டத்து விமானி ஸ்பெயின் வீரப்பா ஈடுபட்டார். 1961-இல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் சுதந்திரத்தைப் பேண, ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா அனுப்பிய 3,000 வீரா அடங்கிய படையில் தளபதியாகவும் பின்னர் ஐ.நா. படைகளின் தலைவராகவும் விளங்கிய இராஜபாளையம் கோட்டிமுக்குல அழகராஜ சிங்கப்ப ராஜாவைப்பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். இ.-12