187 சேதுபதிகள் ஆதரித்த புலவர்கள் நூற்றுக்கணக் கினர். ஒரு சிலரை மட்டும் இங்கே கூறுவோம்; யாழ்ப்பாணம் மகா வித்துவான் ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம் குமாரசாமிப் புலவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வித்துவான் தியாகராசச் செட்டியார். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். திருப்பூவண உலா இயற்றிய கந்தசாமிப் புலவர். தேவபா இயற்றிய சொக்கநாதப் புலவர். திருச்செந்தூர்க் கோவை கோவை இயற்றிய சர்க்கரைப் புலவர். மாம்பழக்கவிராயர். திருவாடானை அந்தாதி இயற்றிய வேம்பத்தூர் பிச்சுவ ஐயர். வின்சுலோ அகராதியைப் பதிப்பதில் வின்சுலோ துரைக்கு உதவி செய்த இராமாநுசக் கவிராயர், பணவிடு தூது சரவணக் கவிராயர். ஆசிரியர் முதுகுளத்தூர் பெரிய கிருஷ்ண ஐயங்கார். நூற்றி எட்டுத் திருப்பதி பதிகங்கள் பாடிய முத்துச் சாமி ஐயங்கார். பாரிகாதை ஆசிரியர் மகாவித்துவான் ரா.இராகவ ஐயங்கார். செந்தமிழ் ஆசிரியர் திருநாராயண ஐயங்கார். பரிதிமாற் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரியார் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மு. இராகவ ஐயங்கார்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/189
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை