189 சென்ற தலை முறைகளில் சிவகங்கை அரசர்கள் புலவர் பலரை ஆதரித்தனர். இதைப்பற்றி,சுவையான ஒரு செய்தி மட்டும் கூறுவோம். கடிகை முத்துப் புலவர் ஒருநாள் முத்து விசய ரகுநாத கெளரி வல்லபர் என்ற சிவகங்கை அரசரைக் காணச் சென்றார். வழக்கத்துக்குமாறாக, அன்று அரசர் புலவரைத் தக்கவாறு வரவேற்கவில்லை. பொறுப்பாரா புலவர்? சினந்தார். புலவர் சினம் இன்று வழங்கி வருகிறது: "கள்ளா அகம்படியா காராளா கம்மாளா வள்ளா ஒட்டா தொட்டியா வாணியா உள்ளன் புலையா நாம் தாதா புன்க வடுகா கௌரி வல்லபா"* வசைபாடலாக - கள்ளா - முக்குலத்தினருள் ஒரு சமூகம் காராளா - காரைக்காட்டு வெள்ளாளன் வள்ள - வள்ளுவச் சாதியன் ஒட்டன் - கிணறு வெட்டும் குலத்தோன் தொட்டியன்--குடுகுடுப்பைக்காரன் வாணியன் - வாணிபச் செட்டி உள்ளன், புலையன் - பள்ளர் சமூகப் பிரிவுகள் நாமதாதா - நாமத்தைப் போட்டுக் கொண்டு
- தொடர்ச்சி
புன் கவடுகா - அற்பமான வடுகர் சாதி, தப்படிப்பவன்