பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கல்லூரியை நிறுவியும் மகாமகோபாத்தியாய பண்டித மணி கதிரேசச் செட்டியார், புலவர் வரத நஞ்சயப்ப பிள்ளை போன்ற புலவர்களை ஆதரித்தும் உள்ளார். தூய தமிழ் நடையில்,'தமிழ் நாடு' என்ற நாளிதழை இவர்கள் மதுரையில் நடத்தினார்கள். நாட்டார் சமூகப் பெருமகனும் மாவட்டக் கழகத் தின் தலைவராக இருந்தவருமான பாகனேரி சி.உ.சுப. உடையப்பா, நாவலர் வேங்கடசாமி நாட்டாருக்கும் பேராதரவு கொடுத்தார். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அமைய இவரும் இதே த பாகனேரி ஊரினரான காசி விசுவநாதன் செட்டியாரும் பெரிதும் உதவியுள்ளனர். மடங்கள்: குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம் தொன்று தொட்டு ஈழநாட்டிலும் இந்தியாவிலும் தமிழ்ப் புலவர் களை ஆதரித்து வந்திருக்கிறது. இப்போது தெய்வ சிகாமணி அருணாசல தேசிகர் இதழ்கள் நடத்தியும், சங்கங்கள் நிறுவியும் பாரிவிழாக் கொண்டாடியும் நாடெங்கும் மேடைதொறும் நல்ல தமிழில் முழங்கியும் தமிழ்ப் புலவர் சிலரை ஆதரித்தும் வருகிறார். ம் கோவிலூர் மடம் நூறு ஆண்டுகளாக வேதாந்த நூல்களை வெளியிட்டு வந்திருக்கிறது. இப்போது இம் மடத்தின் தலைவராக உள்ள இராமநாத ஞானதேசிகர் ஏற்கெனவே திருவண்ணாமலையில் அருணகிரி நாதர் விழாவை மூன்றுநாட் பெருவிழாவாக ஆக்கிய சிறப்புக்கு உரியவர்கள். கோவிலூர் மகாசந்நிதானமாக இவர்கள் பதவி ஏற்ற பிறகு கோவிலூர் மடத்தில் தமிழ்ப் புலவர் களுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்திருக் கிறார்கள்.