பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 திருப்பூவணம் வேதாந்த மடாலயம் நிறுவி 1970-இல் பரிபூரண மடைந்த காசிகாநந்த ஞாநாச் சார்ய சுவாமிகள் தமிழிலும் வடமொழியிலும் பல அரிய நூல்களை ஆக்கியுள்ளார்கள். புலவர்கள்: சங்கால முதல் பெரும் புலவர்கள் இங்கு இருந்திருக் கின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கனியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்ற நாடு திருப்பத்தூர் வட்டத்தில் மகிபாலன்பட்டிப் பகுதியாகும். நல்லிசைப் புலமை மெல்லியலாராகிய மாசாத்தி யார் என்னும் பெண் பாற் புலவர் சிவகங்கைப் பகுதி யிலுள்ள ஒக்கூர் ஊரினர். பரிமேலழகர் இதே ஒக்கூரில் தலைவராக வாழ்ந்தவர் என்றும் பாண்டிய நாட்டு அரசரால் சிறப்புச் செய்யப் பெற்றவர் என்றும் கருதப்படுகிறது.* நற்றிணையில் பாடியுள்ள நால்லாந்தையார் திருக் கோட்டியூர் ஊரினர். தமிழ் இனத்துக்குப் பெருமை தரும் சிலப்பதிகாரக் காலியத்தின் தலைவியாகத் திகழும் கண்ணகி, தமிழ்ப் புலமை உள்ளவள் என்பது 'கண்டகம் பற்றி' எனத் தொடங்கும் யாப்பருங்கல விருத்தியிலுள்ள பாடலால் தெரியும். கண்ணகிக்கு நாட்டரசன் கோட்டையில் கோவில் உள்ளது. ஆதாரம் -- மு.அருணாசலம் ; தமிழ் இலக்கிய வரலாறு 13-ஆம் நூற்றாண்டு - பக்கம் 67.