198 மாதம் குறிப்பிட்டநாளில் விழா நிகழும். பங்குனி மகம், பூரம், அஸ்தம் ஆகிய மூன்று நாட்களில் விழா காரைக்குடியில் நடைபெறும். இராமவதாரம் என்னும் கம்பராமாயணம் அரங்கேற்றிய அஸ்த நட்சத்திரத் தன்று நாட்டரசன் கோட்டையிலுள்ள கம்பன் சமாதிக் கோயிலில் நான்காம் நாள் விழா நடைபெறும். எல்லா நிகழ்ச்சிகளிலும் எவ்வித வேறு பாடுமின்றி அறிஞர்கள் பங்கு பெறுகின்றார்கள். இயல், இசை நாடகம் ஆகிய முத்தமிழ்த்துறை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இந்நிகழ்ச்சிகளை உள்நாட்டு வெளிநாட்டு ரேடியோக்கள் அஞ்சல் செய்கின்றன. சென்ற முப்பத்து நான்கு ஆண்டுகளாக வெளி யிடங்களில் கொட்டகை போட்டு இத்திருநாள் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இவ்வாண்டு முதல் பல லட்சரூபாய் செலவில் அமைந்துள்ள கம்பன் மணி மண்டபத்தில் திருநாள் நடைபெறும். கம்பன் கழகத்தின் குறிக்கோள் பலவும் சிறப்புற நிகழ 'கம்பன் அறநிலை' என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப் பெற்றுள்ளது. அதன் தண்ணிழலில் கம்பன் கழகமும், அதன் பழைய, புதிய பணிகளும் வளம்பெறும். . கம்பன் மணிமண்டபம் எழும்பவும், அதனைச் சார்ந்து நூலகம், ஆராய்ச்சிக்கூடம், கல்விமுதலியன மலரவும் அறவுணர்வுடைய நல்லன்பர்கள் பேராதரவு காட்டி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் இஃதோர் இனிய தமிழ்ப் பண்ணையாய்ப் பயன் சுரக்கத் தொடங்கிவிடும்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/200
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை