பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கட்டாயம் - சுவர் கட்டும் பொழுது இடையிடையே தடுப் பாகச்சிறு தூண் போல், சுவரளவை விடக் கனமாகக் கட்டுதல். கொன்றை-சுவரெழுப்பும் . பொழுது முன் கூட்டியே கட்டிவைக்கப்படும் சுவரின் மூலைக்கட்டு. தொளி உழவு - நீர் பாய்ச்சி நீருடன் உழுதல். புழுதி (உழவு) - காய்ந்த மண்ணை உழுதல். பார்- பெரிய பாத்தி. மிதியடி - செருப்பு; காலணி. இம்மி - மிகச்சிறிய. வெள்ளென - விரைவாக; அதிகாலையில். நிமிண்டுதல் - தூண்டிவிடுதல்; சீண்டுதல். நீரக்க - நீர்நிறையுமாறு; (Liqufying), ww கை எலியோடி (கூரை) வீடுகளில் தூண்களின் மேல் மரங்களைத் தாங்கிக் கொண்டு நிற்கும் மரம். லிங்காவிட்டம்-கை மரங்கள் இணைக்கப் பெற்ற முகட்டுவளை. மக்கிட்டுக்கட்டாக - இறுக, பறித்துக் கொள்ள இயலாத வாறு மார்புறக் கைகளால் கட்டிக்கொள்ளுதல். சொச்சம் - மிச்சம்; மீதி: வாணம்-வீட்டின் அடித்தளத்திற்காக வெட்டப்படும் பள்ளம்- கடைக்கால். ஊமச்சி-நத்தை இனத்தைச் சார்ந்த சிறிய நீர்வாழ் உயிரி. தூரி : . மீன்பிடிக்கும் வலை. வாய் அகன்று அடி சிறுத்தும் அடிப்பாகம் திறக்க இயல்வதாகவும் உள்ளது. நீரோடும்பொழுது மீன்பிடிக்க உதவும்.