19 யிலிருந்தும் பிரிக்கப் பெற்று இராமநாதபுர மாவட்டத் துடன் இணைக்கப் பெற்றன. இம்மாவட்டத்தின் பரப்பளவில் முக்காற்பங்கு அதாவது 3,708 சதுரமைல் இராமநாதபுரம், சிவகங்கை ஜமீன்களின் பரப்பாகும். இயற்கை அமைப்பு மலைகள்: இம்மாவட்டத்திலுள்ள மலைகளைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டு இருக்கின்றோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் இராமநாதபுர மாவட்டத்தில் ஏறி, மதுரை மாவட்டத்தின் பெரிய குளம் பகுதியில் இறங்குவது உடலுக்கு உரம் தரும் சிறந்ததொரு சுற்று லாவாக அமையும். ந்த மலைத் தொடரினின்றும் ஏற்படும் நீர்வளம் இம்மாவட்டத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மேற் குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து கேரளத்தின் சிற்றாறுகளின் சிலவற்றைத் திருப்பிவிட்டால் வறண்ட இராமநாதபுர மாவட்டம் வளம் சுரக்கும். ஆறுகள் வைகை: இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆறு வைகை ஆறு. பெரிய குளம் வட்டத்தில் ஆண்டிப்பட்டி மலையில் தோன்றி, மதுரை வட்டம் வழியாக இம்மாவ டத்திற்குள் சிவகங்கை, பரமக்குடி, இராமநாதபுரம் வட்டங்களில் பாய்ந்து வைகை ஆறு, உச்சிப்புளி அருகே உள்ள ஆற்றங்கரை என்னும் ஊர் ஓரமாக கடலில் கலக் கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் இவ்வாற்றின் நீர் வீணாகாமல், முழுவதும் இராமநாதபுரம் பெரிய கண் மாயை நிரப்பிவிடுகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை