இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
210 காளையார்கோவில் போர் பற்றி 1800 -இல் கிராமியப்பாடல். 'காளையார் கோவிலின் கர்னல் துரையவன் காட்டைக் கடந்து செங் கோட்டைவந்து நீள வளர்ந்திட்ட நாணலுக் குள்ளே நெருங்கிப் பதுங்கிக் கிடக்கிறான்பார்!' பழமொழிகள்: (1) விருதுபட்டிக்குப் போகிற சனியனை வீட்டு வாசல்வரை வந்து விட்டுப்போ என்பானேன்? (வழியில் செல்லும் வம்பை விலைக்கு வாங்குவானேன்? பொருளில்) (2) ஊருக்குக் கடைசி உலகம்பட்டி. (3) குன்றக்குடித் தேவடியாளுக்கு போலே பயணம். என்ற நின்றாப் (4) ராமேசுவரத்துக்குப் போகிறபோது பாம்பனாறு குறுக்கிட்டால் போல. (5) வேற்றூர் அரிசியும் வேற்றூர் விறகும் உண் டானால் சாத்தூரைப் போல ஊராகுமா?