உயர் நிலைப்பள்ளி: 212 மாவட்டக்கழக்கத்தார் நூறு உயர் நிலைப்பள்ளிகளை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளும் ஏராள மாக உள்ளன. இராமநாதபுரத்திலுள்ள ஸ்குவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி தமிழ் நாட்டிலேயே மிகவும் பழமை யான உயர் நிலைப்பள்ளிகளுள் ஒன்று. கத்தோலிக்கர் நடத்தும் பள்ளிகள் ஒரு சிலவே: அவையாவன, தே பிரித்தோ உயர் நிலைப்பள்ளி, தேவகோட்டை; புனித மேரி மகளிர் உயர் நிலைப்பள்ளி, தேவகோட்டை; புனித் அருளானந்தர் உயர்நிலைப்பள்ளி, ஒரியூர்; சேக்ரட் ஹார்ட் உயர் நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர். இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் அரசர்கள் சிறப்பாக நடை தொடங்கிய உயர்நிலைப்பள்ளிகள் பெற்று வருகின்றன. செட்டிநாட்டில் பல உயர் நிலைப்பள்ளிகளைச் செல்வர்கள் நடத்தி வருகிறார்கள். இவற்றுள் காலத்தால் பழமையானது 1913-இல் காரைக்குடியில் தொடங்கப் பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் உயர் நிலைப்பள்ளி. புகழ் பெற்ற பிற பள்ளிகள்: பள்ளத்தூர் - அருணாசலம் செட்டியார் உயர் நிலைப்பள்ளி; ஆ. தெக்கூர் - ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை (உயர் நிலைப்பள்ளி ); காரைக்குடி-ஸ்ரீ மீனாட்சி பெண் கள் உயர் நிலைப்பள்ளி; காரைக்குடி அழகப்ப செட்டி யார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் நன்முறை உயர் நிலைப்பள்ளி. கல்வித்துறையில் கிறது. விருதுநகர் தலைசிறந்து திகழ் சாதி, சமய வேறுபாடின்றி, ஏழை- பணக்காரன் என்ற பேதமின்றி, உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு வரை எல்லா மாணவர்களுக்கும் இலவசக் கல்வி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/214
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை