பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 யளித்துத் தனிப்பெருமை பெற்று விளங்கும் க்ஷத்திரிய வித்தியாசாலை 1889-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விருதைப் பிரமுகர்கள் வே. வன்னிய நாடார்,LP.S. சண்முக நாடார், S. P. பொன்னப்ப நாடார், SV.P.N. சிதம்பர நாடார், வடிவேல் முருக நாடார் ஆகியவர் களின் சிறந்த முயற்சியால் ஒரு சிறிய தொடக்கப் பள்ளியாகத் துவக்கப் பெற்றது. பள்ளியின் வளர்ச்சிக் காக மக்கள் தாராளமாக நன்கொடையளித்தனர். உண்டியல் மூலமும் நன்கொடை வசூலிக்கப் பெற்றது. மக்கள் பிடி அரிசி கொடுத்து கல்வி நிலையங்களை வளர்த் தனர், இப்பள்ளி 1892-இல் நடுநிலைப் பள்ளியாகவும் 1902-இல் உயர் நிலைப் பள்ளியாகவும் வளர்ந்தது. 1895-ஆம் ஆண்டு நகரின் நடுவே மாளிகை போன் றதோர் கட்டிடம் கட்டப் பெற்றது. மாணவர் களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமானதால் சுப்பிரமணிய வித்தியாசாலை, சரஸ்வதி வித்தியாசாலை, க்ஷத்திரிய வித்தியாசாலை என்ற மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பெற்றன. 1956-ஆம் ஆண்டு மதுரை நெடுஞ் சாலையில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதினா யிரம் ரூபாய் செலவில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக் கென ஒரு புதிய கட்டிடம் கட்டப் பெற்றது. பள்ளியில் தென்னிந்தியாவிலே மிகப்பெரிய S. P. கொத்தாள நாடார் விளையாட்டு அரங்கு (Stadium) 1959-ஆம் ஆண்டு கட்டப்பெற்றது. க்ஷத்திரிய வித்தியா சாலை ஆட்சிக் குழுவினர் ஆண்டுதோறும் பொருட் காட்சி நடத்தி, அதிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் பள்ளியின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தி வருகிறார் கள். இப்பள்ளியில் திரு. M. M.நாகலிங்க நாடார் தொழிற் பயிற்சிக்கூடமும், திரு. M A.பழனிச் சாமி நாடார் திறந்தவெளி கலை அரங்கும். இப்