பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 மின்விளக்கம் வைத்து மிகவிரைந்து கட்டினான் பொன்விளக்கங் கண்ட புதிர்."* பி.ஏ. புகுமுக வகுப்பு. (அரசியல், பொருளா தாரம்), பி.எஸ்ஸி., (கணிதம், பௌதீகம், வேதியல், தாவரம், உயிரியல், நிலவியல்), பி.எஸ்ஸி., (ஸ்பெஷல்), எம்.காம். எம்.ஏ., (தமிழ்) வகுப்புக்கள் பி.காம்., உள்ளன. 2300 மாணவர்கள் இக்கல்லூரியில் பயின்று வரு கின்றனர். 35,000 நூல்கள் கொண்ட நூலகம் உளது. கல்லூரி வட்டத்தில் பவநகர் விளையாட்டரங்கு அமைக்கப் பெற்றிருக்கிறது. வள்ளல் அழகப்பர் விருப் பப்படி இவ்விடத்திலேயே அவரது உடல் எரியூட்டி அடக்கம் செய்யப் பெற்றது. வள்ளலின் மகள் திருமதி உமையாள் இராமநாதன் இக்கல்லூரியின் செயலாள ராக இருந்து வருகிறார். இவ்வாண்டில் கல்லூரி வெள்ளி விழாக் காணுகிறது. விருதுநகர் ஹிந்து நாடார்கள் செந்திக்குமார நாடார் கல்லூரி 1947-இல் கோவில்பட்டியில் நாடார் மகாஜன சங்க மாநாடு கூடியது. விருதுநகரில் கல்லூரி தொடங்க இரண்டு லட்சம் தருவதாக ராவ்பகதூர் எம்.எஸ்.பி. செந்திக்குமார நாடார் அறிவித்தார். அந்த ஆண்டி லேயே கல்லூரி தொடங்கப் பெற்றது. கல்லூரியை நடத்துவதற்கு விருதுநகர் ஹிந்து நாடார்களுக்குப் பாத்தியமான செந்திக்குமார நாடார் உயர்தரக் கல்லூரி பரிபாலன சபை பதிவு செய்யப்பெற்றது. இதன் பிறகு நாடார் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய கொடை விளக்கு -டாக்டர் வ. சுப மாணிக்கம், - -14