பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி திருப்பத்தூர் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளை கொடை யால் இக்கல்லூரி 1965-இல் தொடங்கப் பெற்றது. மதுரைச் சாலையில் கல்லூரிக் கட்டிடங்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. புகுமுக வகுப்பு: பி. ஏ; பி. எஸ்சி; பி.காம்: ஆகிய வகுப்புக்களும் நடைபெறுகின்றன. சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி இராமநாதபுரம் சேதுபதி அவர்களின் ஸ்ரீசண்முக ராஜேசுவர கொடையாலும் முயற்சியாலும், இராமநாதபுரம் அரண் மனைக் கட்டிடத்தில் இக்கல்லூரி 1965-இல் ஏற்பட்டது; பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க 1967-இல் காலஞ்சென்ற அந்தச் சேதுபதியின் பெயரைக் கல்லூரிக்கு வைக்க அரசினர் ஆணையிட்டனர். இராம் நாத சேதுபதியின் இடைவிடா ஆர்வத்தால் மதுரைச் சாலையில் கல்லூரிக் கட்டிடங்கள் உருவாகி வருகின்றன. புகுமுக வகுப்பு : பி. ஏ ; பி.எஸ்சி; வகுப்புக்கள் நடைபெறுகின்றன. . ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை தேவகோட்டை வள்ளல் உ.ராம.மே.சுப.சேவு. அண்ணாமலை செட்டியாரின் அறக்கட்டளையால் இக் கல்லூரி 1-9-1970-இல் தொடங்கப் பெற்றது. பின் தங்கிய திருவாடனைப் பகுதி இக்கல்லூரியால் பயன் பெறுகிறது. மதுரைப் பல்கலைக் கழகத்தில் இணைந்த நிறுவனங்களுள் பொருள் வளம் மிக்க கல்லூரிகளுள் இதுவும் ஒன்று.