225 பிற மொழிக்கல்வி: தெலுங்கு வித்யாலயம்: தெலுங்கு பேசும் மக்கள் மேற்கு இராமநாதபுர மாவட்டத்தில் தொகையாக உள்ளனர். இராஜபாளை யத்தில் மணிமேகலை மன்றத்தின் ஆதரவில் மு.கு. ஜகந்நாத ராஜா, கொ. LOIT கோதண்டம், பி.ஏ. துரைராஜா ஆகியோர் தெலுங்கு வகுப்புக்கள் நடத்து கின்றனர். தமிழர்களுக்கும் தெலுங்கு கற்பிக்க இங்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். தமிழ். தெலுங்கு கலாச்சார உறவுகளை இவர்கள் வளர்த்து வருகின்றனர். பன்மொழிப் புலவர் ஜகந்நாத ராஜா தமிழ் நூல் களைத் தெலுங்கிலும் தெலுங்கு நூல்களை தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார். இராமேசுவரம் தேவஸ்தானப் பாடசாலை: வடமொழி இராமேசுவரம் தேவஸ்தானத்தார் யிலும் தமிழிலும் உள்ள சமயநூல்களை கற்பிப்பதற் காக 915-இல் மதுரையில் இந்தப்பாடசாலையை நிறு வினர். 1921-இல் வியாகரண சிரோமணி வித்துவான் வகுப்புத் தொடங்கப் பெற்று இப்பாடசாலை சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது. இப்போது வித்துவான் 2-A என்ற வகுப்பு மட்டும் நடைபெறுகிறது. இப்படிப்பில் வடமொழி தென்மொழி இரண்டுக்கும் சம இடம் உண்டு. எனவே இதற்கு சமப்பிரதான வித்துவான் வகுப்பு என்று பெயர். மதுரைப் பல்கலைக் கழகம் ஏற்பட்டதும் இக் கல்லூரி மதுரையிலிருந்து இராமேசுவரத்துக்கு மாற்றப் பெற்றது. .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/227
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை