231 காரைக்குடி இந்துமதாபிமான சங்கம். நூலகத் திற்கு மு.ரா. கந்தசாமிக் கவிராயர் நூலகம் விலைக்கு வாங்கப் பெற்றிருக்கிறது. காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர். நூலகம்: அறிவியல் துறையில் இது, இந்தியாவிலுள்ள சிறந்த நூலகங்களில் ஒன்று. செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் நூலகம்: நூலகம் சிறிது. எனினும் பிற இடங்களில் இல்லாத சில நூல்கள் உள்ளன. 'சோமலெ' நூலகத்தின் ஒரு பகுதி இங்கு உள்ளது. இராமநாதபுரம்: சேஷாத்திரி மெமோரியல் லைபரரி. வெள்ளைச்சாமி நாடார் நகராட்சி விருதுநகர்: நூலகம். சிவகங்கை: கோகலே நூலகம். பென்னிங்டன் நூல் நிலையம் ஸ்ரீ வில்லிபுத்தூர் இம்மாவட்டத்திலுள்ள சிறந்த நூலகங்களுள் இது ஒன்று. இது 1878-இல் தொடங்கப் பெற்றுச் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்நூல் நிலையத்தை நிறுவியவர் அந்நாளில் ஸ்ரீ வில்லிபுத்தூர் வட்டத்துத் தாசில்தாராக இருந்த சரவண முத்துப்பிள்ளை என்பவர் ஆவார். அவரது முயற்சியால் பெண்கள் பள்ளி ஒன்றும் இவ்வூரில் அமைக்கப்பட்டது. இந்நிலையங்கள் செம்மையாக நடப்பதற்காக அவர் பொது மக்களிடமிருந்து நன்கொடை வசூலித்து அவ்வாறு வசூலான தொகை களைக்கொண்டு கடைகள் கட்டினார்; இக்கடைகளின் தொகுப்பே 'பென்னிங்டன் மார்க்கட்' என்ற பெயரில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/233
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை