பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிரான் மலைக் காடுகளில் 6, 7 அடி உயரமுள்ள ஜோதி மரம் இருப்பதாயும், இருள் நிறைந்த இராக் காலங்களில் அது பிரகாசிப்பதாயும், அம்மரத்தினடியி லிருந்து ஒரு நூலைப் படிப்பதற்கு வேண்டும் அளவு அந்த மரம் ஒளி தருவதாயும் அமாவாசை நாட்களில் அமமரம் வெகு தூரம் வரை வெளிச்சம் தெரியச் செய்வதாயும் என் சிறிய தந்தையார் கூற, இளமையில் கேள்விப்பட் டிருக்கிறேன். இத்தகைய மரங்கள் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள காடுகளில் இருப்பதாக நூல்கள் கூறுகின்றன. அரசமரம்: இராமநாதபுர வட்டம் திருப்புல்லணை யில் இருக்கிற தல விருட்சம், அரசமரம். இம்மரத்தின் லை ஏனைய அரசிலைகள் போலின்றிக் குட்டையாக இருக்கிறது. ஆனால் நுனியும், காம்பும் அனுமார்வால் போல் உள்ளன. பழம் பாடல் ஒன்று இந்த அரச மரத்தில் ஆலின் விழுதுகள் போல விழுதுகள் இருந்த தாகக் கூறுகிறது. இப்போது விழுதுகள் இல்லை. வேப்பமரம்: காரைக்குடி அழகப்பர் கல்லூரி மாணவர் விடுதியிலுள்ள வேப்ப மரம் ஒன்றின் இலைகள் கசப்பதே இல்லையாம். மாணவர்கள் மாணவர்கள் வேடிக்கையாக இதன் இலைகளைச் சுவைத்தபோது இதனை அறிந்தனர். தென்னை மரம் : அதிசயமான ஒரு தென்னைமரம் இராஜபாளையத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரிக் கண்மாய் அருகே மருங்கூர்த் தோப்பில் இருக்கிறது. மழை இராமநாதபுர மாவட்டத்தின் சாரசரி மழை ஓர் ஆண்டுக்கு 35 அங்குலம் (1000 மில்லி மீட்டர்).