241 சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை, திருப்பத்தூர் : f இது தமிழ் நாட்டிலுள்ள தலை சிறந்த மருத்துவ மனைகளுள் ஒன்று. 1909-இல் டாக்டர் கூகல்பர்க் என்ற சுவீடன் நாட்டு டாக்டர் இங்கு, கண் ஆஸ்பத்திரி' ஏற்படுத்தினார். கண் மருத்துவத் துறையில் அவர் ஒரு நிபுணர். அவரிடம் பயின்ற பலர் தமிழ் நாடெங்கும் கண் மருத்துவத்தில் புகழும் பொருளும் பெற்றுளர். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சென்னையில் ஏற்பட்ட முதல் அமைச்சரமையில் அமைச்சராக இருந்த டாக்டர் குருபாதம் இங்கு பணி புரிந்தவரே. கண் மருத்துவம் தவிர பிற துறைகளிலும் இம்மருத்துவமனை விரிந் துள்ளது. 300 படுக்கைகள் உள்ளன. மருத்துவமனை உள்ள இடம் வரலாறு உடையது. சிவகங்கையை ஆண்ட மருது சமாதிக்கு மக்கள் வாரந்தொறும் சென்று வழிபட்டு, விடுதலை உணர்வும் சிவகங்கைச் சீமையின் உரிமை மருது வழியினர்க்கே மீண்டும் வழங்கப் பெற வேண்டுமென்ற எண்ணமும் பெற்றனர். இவற்றைத் தடுக்க, மருதுவின் உடமையைச் சட்ட விரோதமாகப் பெற்ற சிவகங்கை அரசர் சமாதியைச் சுற்றிய 173 ஏக்கர் நிலத்தை மருத்துவமனைக்கு வழங்கினார். சமா யை இன்றும் இம்மனையின் பரிசோதனைக் கூடத்திற்கு அருகே காணலாம். சிறந்த ஆப்பரேசன் தியேட்டர் இங்கு உளது. சுவீடிஷ் டாக்டர்களும் உள்ளனர். நர்ஸ் தொழிலுக்குப் பயிற்சி தரும் கல்வி நிலையமும் குருடர்களுக்காக ஒரு பள்ளியும் தொழிற்பயிற்சி நிலையமும் இயங்குகின்றன. ஏழை எளியவர்க்கு இம்மருத்துவமனை செய்யும் பணி பாராட்டுக்குரியது. காந்தியடிகள் 1927இல் வருகை புரிந்து இம்மருத்துவமனையின் தொண்டினைப் போற்றி யுள்ளார்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/243
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை