பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மிகவும் குறைந்த அளவாகும். திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் இந்த அளவுகூட மழை பெய்யவில்லை . ராமநாதபுர மாவட்டத்தில் பெய்யும் மழை வட கிழக்குப் பருவக்காற்றால் ஐப்பசி, கார்த்திகை மாதங் களில் பெய்கிறது. வட கிழக்குப் பருவக்காற்றுத் தவறி விட்டால், அவ்வாண்டில் இம்மாவட்டத்தைக் காப்பாற் றக்கூடியது வங்கக் கடலில் தென்பகுதியிலோ மன்னார் வளைகுடாவிலோ உருவாகும் புயல்தான். புயல் மழையும் இல்லாவிட்டால், சாவி அல்லது ராசி காணாமற்போவது தான் இம்மாவட்டத்தின் நீண்ட நெடுங்கால வரலாறு. இம்மாவட்டத்திலேயே மழை மிகுந்தது இராஜ பாளையம் பகுதி; மழை குறைந்தது சாத்தூர் - சிவகாசி நகர்கட்கு இடைப்பட்ட பகுதி. பாம்பனில் இந்திய அரசின் வானிலை ஆய்வு நிலையம் செயல்படுகிறது. சேது சமுத்திரத்தில் புயல் அறிகுறி ஏற்படின், அதை முன்கூட்டி இவ்வலுவலகம் அறிவிக் கிறது. இம்மாவட்டத்தில் சரிபாதி தரிசாக இருக்கிறது. எஞ்சிய பாதியிலும் மூன்றில் ஒரு பகுதியில் புன்செய்ப் பயிர்களே பயிராகின்றன. புவியியல் வளம் லாத . இராமநாதபுர மாவட்டம் புவியியல் வளம் இல் மாவட்டம் என்று நெடுங்காலமாகக் கருதப் பட்டது. அக்கருத்து, தவறானது என்று அண்மையில் தெரியவருகிறது. ஊர்ப் பெயர்கள் சிலவற்றிலிருந்து இம்மாவட்டத் தின் இயற்கை வளத்தை உணரலாம். சான்று: பசும் பொன் (முதுகுளத்தூர் வட்டம்); செம்பொன்னூர்