பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 (4) மண்டபம் ஊராட்சி ஒன்றியம். (5) இராமேசுவரம் நகரியம் ஆகியவை அடங்கி யுள்ளன. இராமநாதபுரம் நகரம் : 1959-இல் இங்கு ஒரு நகராண்மைக் கழகம் ஏற்பட் டது. மக்கள் தொகை 30,000. ஊர்ப் பெயர்: இந்நகருக்கு முகவை என்றும் பெயர் உண்டு. இக்காரணத்தால் இராமநாதபுர மாவட்டத்தை முகவை மாவட்டம்" என்று பலர் எழுதிவருகின்றனர். இராமநாதபுரம், வைகை ஆற்றின் முகத்தில் உள்ள ஊர். காவிரி புகும் இடம் புகார் ஆனாற்போல, நிலம் கடலினை முகக்கும் ஊர் ஊர் முகவை ஆயிற்று என்பர். இராமநாதபுரமே கடல் துறைமுகமாக இருந்து பிறகு நிலப்பகுதி பெருகி கடல் பெரியபட்டினம் பகுதிக்குச் சென்று சுருங்கிவிட்டதாகவும் கூறுவர். நாரை பறக்காத 48 ஊர்களுக்குப் பாய்ந்த பிறகு வைகை ஆறு, இராமநாதபுரம் பெரிய கண்மாயில் சங்கமமாகி அந்தக் கண்மாயிலிருந்தவாறு கடலில் கலக்கிறது, இந்நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் முகவை ஊரணி என்னும் ஊரணி இருக்கிறது. இராமநாதபுரம் என்ற பெயர் இராமேசுவரத்தில் கோவில் கொண்டிருக்கும் இராமநாத சுவாமியின் பெய ரால் ஏற்பட்டது என்பர். அமைப்பு : இராமேசுவரம், தனுஷ்கோடி, தேவிபட்டி னம், திருப்புல்லணை, திருஉத்தரகோசமங்கை ஆகிய தலங் களுக்குச் செல்வதற்கு இந்நகர் வாயிலாக இருக்கிறது. இந்நகரில் எப்போதும் கடற்காற்று வீசிக்கொண்டிருக் கிறது.