P மைல். 258 இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, முதுகுளத்தூர் என்ற ஜமீன் வட்டங்கள் இருந்தன. இப்பகுதியில் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப் பெற்றது. சிவகங்கை ஜமீன் இராமநாதபுரத்திலிருந்து பிரித் துக் கொடுக்கப்பட்டதே. அதற்குமுன் இம்மாவட்டத் கடற்பகுதி முழுவதும் இந்த ஜமீனிலேயே தின் இருந்தது. 1772-இல் இராமநாதபுரம் நகரை ஜெனரல் ஸ்மித் என்பவர் கைபற்றிக் கொண்டார். 1792 வரை ஆங்கிலே யரின் இராணுவத் தளமாக இருந்தது. கிழவன் சேதுபதி காலத்தில் கோட்டையும் படைகள் தங்க மூலக்கொத்தளமும் இருந்தன. இப்போது அவை மறைந்து விட்டன. உள்பட்டினம், வெளிப்பட்டினம், பட்டினம் காத்தான் என்ற பெயர்கள் மட்டும் நிலவு கின்றன. 7-9-1949இல் இராமநாதபுரம் ஜமீன் தமிழக அர சால் எடுத்துக் கொள்ளப்பட்டது. நஷ்டஈட்டுத் தொகை 47 வட்சம் ரூபாயாக முடிவு செய்யப் பெற்றது. பிற ஜமீன்களைப் போலன்றி இந்த ஜமீனை ஆண்ட சேதுபதி களின் மீது எப்போதும் மக்கள் பேரன்புடன் இருக்கிறார் கள். இதற்கு இவர்களுடைய தெய்வத்தன்மையும் ஈகையும் காரணம் எனலாம். "அரிச்சந்திர புராணம் குறிப்பிடும் லோலன் ஆறில் ஒரு பங்கு வாங்குவான், சேதுபதி பன்னிரண்டில் ஒரு பங்கு வாங்குவான்” என்பது பழமொழி. சேதுபதிகள் எப்போதும் இராமநாத சுவாமியின் நினைவாகவே உள்ளவர்கள். இராமநாத சகாயம் என்று எழுதியே. கையெழுத்து இடுவார்கள். திருவிதாங்கூர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/255
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை