பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பட்டம் மகாராஜாவுக்குப் பத்மநாபதாசன் என்ற இருப்பதுபோல சேதுபதிகளுக்கு பர்வதவர்த்தினிதாசன் என்ற பட்டம் உண்டு. சேதுபதியின் அரண்மனையும் அதனுள்ள லும் இராமலிங்க விலாசம் கோவி என்னும் மாளிகையும் காணத்தக்கன. கோவில்கள் இராஜராஜேசுவரி கோவில் 64 சக்தி பீடங்களுள் இராமநாதபுரம் ஒன்று. இக் கோவிலால் இந்நகர் இப்பெருமை பெற்றிருக்கிறது. அரண்மனையுள் உள்ள இக்கோவிலில் சேதுபதிகள் நாள் தோறும் வழிபடுவது மரபு திருமலைநாயக்கருக்கு நெருக்கடியான ஒரு நேரத்தில் சேதுபதிகள் படை உத வினர். அதற்குப் பரிசாக திருமலைநாயக்கர் ஒரு துர்க் கையை சேதுபதிகளுக்குக் கொடுத்தார். துர்க்கைக்கு நரபலி கொடுக்க வேண்டியிருந்ததால் பிற்காலத்தில் சிருங்கேரி சங்கராச் சாரியாரின் ஆணையின் வண்ணம் இந்த உருவம் இராஜ ராஜேசுவரியாக மாற்றப் பெற்றது. இராஜராஜேசுவரி உருவம் 11 அடி உயரம். சொக்கத் தங்கத்தினால் ஆனது. நவராத்திரிவிழா இங்கு பெரிதாக நடைபெறுகிறது. பிற கோவில்கள பாலசுப்பிரமணிய சுவாமிகோவில்: இது பாஸ்கர சேதுபதியால் கட்டப்பட்டது. வனசங்கரி அம்மன் கோவில்: இக்கோவிலுக்கு விடப்பட்ட கிராமங்கள் சிவகங்கை ஜமீனில் உள்ளன.